மேற்படிப்புகளிலும், பணியிடங்களிலும் சாதிப்பதற்கு ஆங்கில அறிவு மிக அவசியம். இதனை கருத்தில் கொண்டு புளியங்குடி ஹிக்மத் அகாடமி கட்டணமில்லா கோடைகால SPOKEN ENGLISH பயிற்சி வகுப்புகளை நடத்தியது. சுமார் 45 நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சியில் 40 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
பெரும் ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவர்களுக்கு ஆங்கில இலக்கணம் பற்றியும், ஆங்கிலத்தில் எப்படி பேச வேண்டும் என்பது குறித்தும் முறையான பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவர்களிடத்தில் இயல்பாக இருக்கும் தயக்கங்களை உடைத்து அனைவரின் முன்னிலையிலும் எந்தவித தயக்கமும் இன்றி இயல்பாக பேசும் அளவிற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கலந்து கொண்ட மாணவ, மாணவியர்கள் நூற்றுக்கணக்கான புதிய ஆங்கிலச் சொற்களை அதன் அர்த்தத்துடன் அறிந்து கொண்டனர்.
பயிற்சி வகுப்பின் இறுதியில் சிறப்பான முறையில் இப்பயிற்சி வகுப்பினை பயன்படுத்திக் கொண்டு நன்கு ஆங்கிலத்தில் பேசிய மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டு கோப்பையும், பதக்கமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.
கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஹிக்மத் அகாடமி ஏற்பாடு செய்த இப்பயிற்சி முகாம் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும், ஆங்கிலம் மீது இருந்த தயக்கமும், ஒருவித பயமும் விலகி எளிதில் கற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையைத் தந்ததாக மாணவ, மாணவியர் கருத்து தெரிவித்தனர்.
புகைப்படங்கள்
0 comments:
Post a Comment