அன்னை ராபியா அறக்கட்டளை

Thursday, July 3, 2025

+2 மற்றும் SSLC பொதுத்தேர்வில் சாதித்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா

 புளியங்குடி ஹிக்மத் அகாடமி நடத்திய +2 மற்றும் SSLC பொதுத்தேர்வில் சாதித்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா

கடந்த 24-05-2025 சனிக்கிழமை அன்று ஹிக்மத் அகாடமி வளாகத்தில் இறைஅருளால் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
மீராசா அஹ்லுஸ் சுன்னத் மேலப்பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டியின் தலைவர் அல்ஹாஜ். P.N.M. மௌலல் கௌமி M.E., தலைமை தாங்கினார்.
ஹிக்மத் அகாடமியின் கௌரவ ஆலோசகர் ஹாஜி M. சுல்தான் செய்யது இப்ராஹிம் B.Com., ஜமாலியா ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ். A. காஜா முகைதீன், நியூ கிரஸண்ட்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் அல்ஹாஜ். S. செய்யது சுலைமான் JCO., Ex.Army, காயிதேமில்லத் பள்ளி தலைமை ஆசிரியை சபூர் பாத்திமா M.Sc.,M.Phil.,B.Ed., 14வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஹாஜி. M.M.Y. முகம்மது நயினார், அல்மாஸ் கன்ஸ்ட்ரக்சன் A. செய்யது அலி, ஹிக்மத் அகாடமி நூலக ஒருங்கிணைப்பாளர் S. முகம்மது முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தென்காசி நகர்மன்றத் தலைவர் ஜனாப் R. சாதிர், மதுரை வக்ஃபு வாரியக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர். அப்துல் காதிர் M.Sc., M.Phil., PGDCA., Ph.D.,. ஆகியோர் மாணவர்களை வாழ்த்தியும், ஊக்கப்படுத்தியும் சிறப்புரையாற்றினர்.
நன்றியுரையோடு விழா இனிதே நிறைவு பெற்றது.
மாணவ/மாணவியர் மற்றும் பெற்றோர்கள் மகிழ்வுடன் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். படிக்கும் மாணவ/மாணவியருக்கு ஊக்கமும், பாராட்டுதலும் மிக அவசியம். அந்த வகையில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை புரிந்தவர்களுக்கு நமது நகரில் ஹிக்மத் அகாடமி பரிசளித்து பாராட்டியது வரவேற்கத்தக்க விஷயம் என்றும், இதுபோன்ற செயல்பாடுகளை ஹிக்மத் அகாடமி தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என கல்வியாளர்களும், சமூக சிந்தனையாளர்களும் கருத்து தெரிவித்தனர்.
சொந்த ஊரில் இதுபோன்ற பாராட்டுதல்களும், ஊக்கமும் கிடைக்க்பெறுவது தொடர்ந்து சாதிப்பதற்கு ஊக்கம் தருவதாக பரிசு பெற்ற மாணவ/மாணவியர் கருத்து தெரிவித்தனர்.

                                    நிகழ்ச்சியின் அழைப்பிதழ் & புகைப்படங்கள்
































Share:

0 comments:

Post a Comment

Annai Rabiya Trust

Hikmath Academy

Discovery Training Institute

Annai Rabiya Publication

பார்வையாளர்கள்