அன்னை ராபியா அறக்கட்டளை

திறன் வளர்த்தல்

பல்வேறு கல்வி, சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வரும் அன்னை ராபியா அறக்கட்டளை மற்றும் ஹிக்மத் அகாடமி மாணவ/மாணவியர், இளைஞர்/இளைஞிகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு 'திறன் வளர்த்தல்' என்னும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

ஒவ்வொருவருக்குள்ளும் ஏதேனுமொரு தனித்திறமை நிச்சயமாக இருக்கும். அதனைக் கண்டுபிடித்து ஒவ்வொருவரும் தங்களது தனித்திறமையை வளர்த்துக் கொள்வதற்கான வழிகாட்டுதல்களையும், பயிற்சியையும் அளிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

இத்திட்டத்தின் கீழ் சாதிக்கத் துடிக்கும் புளியங்குடி  மாணவ/மாணவியர், இளைஞர்/இளைஞிகளை  துறை வாரியாக அடையாளம் காணுவதற்காக வேண்டியே கீழே உள்ள சுயவிவரப் படிவம்.

கல்வி, விளையாட்டு, எழுத்து, ஊடகம், அறிவியல் ஆராய்ச்சி, சுயதொழில், ஆங்கிலப் புலமை, டி.என்.பி.எஸ்.சி, யூ.பி.எஸ்.சி போன்ற போட்டித் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி தேவைப்படுபவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பி அன்னை ராபியா அறக்கட்டளை நிர்வாகத்திற்கு கிடைக்கச் செய்யவும்.

அன்னை ராபியா அறக்கட்டளை மற்றும் ஹிக்மத் அகாடமியின் சார்பாக அவ்வப்போது ஏற்பாடு செய்யப்படும் ஒவ்வொரு துறை சார்ந்த கருத்தரங்குகள், விழிப்புணர்வு முகாம்கள், பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள  அந்தந்த துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்படும்.

ஒவ்வொருவரும் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்படும்.

சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவரின் மீதும் தனிக் கவனம் செலுத்தி, மென்மேலும் திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவுவதற்கு துறை வாரியான திறமையாளர்களை அடையாளம் காண வேண்டியது அவசியமாகிறது. ஆகையால் படிவத்தில் கோரப்பட்டுள்ள உங்களிடம் உள்ள தனித் திறமைகள், ஆர்வமுள்ள துறைகள், பயிற்சி தேவைப்படும் துறைகள் உள்ளிட்ட தகவல்களை நிரப்பி சமர்ப்பிக்கவும்.

உங்களை சாதனையாளர்களாக உருவாக்குவதற்கு அன்னை ராபியா அறக்கட்டளை மற்றும் ஹிக்மத் அகாடமி தன்னால் ஆன முயற்சிகளை முன்னெடுக்கும்.

சுயவிவர விண்ணப்பப் படிவத்தை நிரப்ப
கீழே உள்ள லிங்கை அழுத்தவும்


அல்லது கீழ்க்காணும்  QR CODEஐஸ்கேன் செய்யவும்.



Annai Rabiya Trust

Hikmath Academy

Discovery Training Institute

Annai Rabiya Publication

பார்வையாளர்கள்