அன்னை ராபியா அறக்கட்டளை

அன்னை ராபியா அறக்கட்டளை



புளியங்குடி சுற்றுவட்டார மக்களின் சமூக, கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கான பணிகளில் ஈடுபட வேண்டும், அறிவார்ந்த இளைய சமுதாயத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், வளரும் தலைமுறையினருக்கு வாசிக்கும் பழக்கத்தைக் கற்றுத் தந்து வரலாறு அறிந்தவர்களாக வார்த்தெடுக்க வேண்டும், நலிந்த நிலையில் உள்ளவர்கள் சுயதொழில்கள் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும், மாணவர்கள் கல்வி உதவித் தொகைகளைப் பெற உதவ வேண்டும், இந்திய அளவிலான வேலைவாய்ப்புகளிலும் நுழைவுத் தேர்வுகளிலும் கவனம் செலுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி அதற்கான பயிற்சிகளை வழங்க வேண்டும், வெளிநாடுகளில் மேற்படிப்பை படிப்பதற்கான வழிகாட்டுதலை வழங்க வேண்டும், ஆதரவற்றவர்களுக்கு அரசின் சலுகைகள் கிடைக்கச் செய்ய வேண்டும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும்,  மக்களுக்கு பயனுள்ள தலைப்புகளில் கருத்தரங்குகள், மற்றும் விழிப்புணர்வு முகாம்களை நடத்த வேண்டும்,  அன்னை ராபியா பதிப்பகம் மூலமாக பயனுள்ள நூல்களை வெளியிட வேண்டும் என்பன போன்ற நோக்கங்களை இலக்காகக் கொண்டு அன்னை ராபியா அறக்கட்டளை தொடங்கப்பட்டு அதன்படி செயல்பட்டு வருகிறது.

சட்ட விதிகளின்படி பதிவு செய்யப்பட்ட அன்னை ராபியா அறக்கட்டளை தென்காசி மாவட்டம் புளியங்குடியில் 2016ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.  ஹிக்மத் அகாடமி என்ற பெயரில் ஒரு அகாடமி தொடங்கப்பட்டு கல்வி சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஹிக்மத் அகாடமி அன்னை ராபியா அறக்கட்டளையின் ஓர் அங்கமாகும். 

தொலைநோக்கு:
சமூக, கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல். ஒளிமயமான எதிர்காலத்தை வழிநடத்தும் அறிவார்ந்த மற்றும் நேர்மையான இளைஞர்களை உருவாக்குதல்.

நோக்கம்:
அன்னை ராபியா அறக்கட்டளை சமூக நல்வாழ்வை மேம்படுத்துதல், கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துதல் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவித்தல் போன்ற திட்டங்கள் மூலம் புளியங்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வை மேம்படுத்த உறுதி கொண்டுள்ளது. இளைஞர்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதன் மூலம் நிலையான மாற்றத்தை ஏற்படுத்தவும், சமூகத்தின் செழிப்புக்கு பங்களிக்கவும் கூடிய இளம் தலைமுறையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Annai Rabiya Trust

Hikmath Academy

Discovery Training Institute

Annai Rabiya Publication

பார்வையாளர்கள்