புளியங்குடி ஹிக்மத் அகாடமியின் மேற்படிப்பிற்கான வழிகாட்டுதல்
புளியங்குடி ஹிக்மத் அகாடமி சமீபத்தில் நடத்திய ஒரு நேர்காணலின் போது 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களிடம் எதிர்கால இலட்சியம் குறித்துக் கேட்கப்பட்டது. பெரும்பாலான மாணவர்கள் நர்ஸிங் படிக்க வேண்டும் என்றனர். காரணம் மருத்துவத்துறையில் டாக்டர் இல்லையென்றால் நர்ஸ் என்ற இரண்டு படிப்புகள் மட்டுமே உள்ளன என்றே பெரும்பாலான மாணவர்கள் எண்ணுகின்றனர். அவர்களிடம் மெடிக்கல் துறையில் உள்ள மற்ற படிப்புகள் குறித்த அறிமுகமோ, புரிதலோ இல்லை.
+2 முடித்த பிறகு என்னென்ன நுழைவுத் தேர்வுகள் எழுதலாம், என்னென்ன படிப்புகளில் சேரலாம் என்பன குறித்து நிறைய வழிகாட்டுதல்களை ஹிக்மத் அகாடமி மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.
அந்த வகையில் மருத்துவம் சார்ந்த 20 பி.எஸ்.சி படிப்புகள் குறித்து டாக்டர். அ.ப. ஃபரூக் அப்துல்லா எழுதிய கட்டுரை சமரசம் இதழில் வெளிவந்தது. அக்கட்டுரையை நகல் எடுத்து ஹிக்மத் அகாடமி சார்பாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
கட்டுரையின் பிரதிகளை ஹிக்மத் அகாடமியின் இயற்பியல் ஆசிரியை அம்பிகா மற்றும் ஹிக்மத் அகாடமியின் செயல்திட்ட இயக்குநர் செய்யது ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கினர்.
மருத்துத்துறையில் இத்தனை படிப்புகள் இருப்பது இதுவரையில் தெரியாது எனவும், எதிர்காலத்தையும், மேற்படிப்பையும் திட்டமிட இக்கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் கட்டுரையைப் படித்த மாணவர்களும், பெற்றோர்களும் கருத்து தெரிவித்தனர். ஹிக்மத் அகாடமியின் இதுபோன்ற செயல்பாடுகள் தொடர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.
இக்கட்டுரையை கீழ்க்கண்ட இணைப்பில் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.
https://www.annairabiya.org/p/downloads.html
நன்றி: டாக்டர் அ.ப. ஃபரூக் அப்துல்லா & சமரசம்