அன்னை ராபியா அறக்கட்டளை

Monday, April 22, 2019

வாசிப்பை நேசிப்போம் - நூல் அன்பளிப்பு

அன்னை ராபியா அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவரான மைதீன் பாதுஷா அவர்களின் திருமணம் 13-01-2019 அன்று நடைபெற்றது. இத்திருமணத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கு 'வாசிப்பை நேசிப்போம்' என்ற நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அன்னை ராபியா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ராபியா குமாரன் வாசிப்பு குறித்து எழுதிய மூன்று கட்டுரைகள், சிறுகதை, கவிதை ஆகியவற்றைத் தொகுத்து 'வாசிப்பை நேசிப்போம்' என்ற தலைப்பில் சிறு நூலாக அன்னை ராபியா பதிப்பகம் சார்பாக வெளியிடப்பட்டது. இந்நூல் அன்னை ராபியா அறக்கட்டளையின்  ஓர் அங்கமான அன்னை ராபியா பதிப்பகம் மூலமாக வெளியிடப்படும் மூன்றாவது நூலாகும். 

'வாசிப்பை நேசிப்போம், வாசிக்கும் தலைமுறையை வார்த்தெடுப்போம்' என்ற தொடர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்ட இந்நூலை வாசித்தவர்கள், 'வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக உள்ளது என்றும், வளரும் பருவத்தினர் அவசியம் படிக்க வேண்டிய நூல்' என்றும் கருத்து தெரிவித்தனர். 

வாசிப்பை நேசிப்போம்  நூல் அன்பளிப்பு  அட்டைப் படங்கள்




Share:

0 comments:

Post a Comment

Annai Rabiya Trust

Hikmath Academy

Discovery Training Institute

Annai Rabiya Publication

பார்வையாளர்கள்