அன்னை ராபியா அறக்கட்டளை

Tuesday, May 1, 2018

தேசம் மறந்த ஆளுமைகள் - நூல் அன்பளிப்பு

அன்னை ராபியா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் அ. முஹமது ரஃபிக் அவர்களின் திருமணத்தில் 'அறிஞர்களின் பார்வையில் அண்ணல் நபி (ஸல்)' என்ற நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது அனைவரையும் கவர்ந்தது. இதுபோல் தனது திருமணத்திற்கு வருகை தந்து சிறப்பிப்பவர்களுக்கும்  புத்தகத்தை அன்பளிப்புச் செய்ய வேண்டும் என்று முஹம்மது சபியுல்லா என்பவர் விரும்பினார். அதன்படி, 'தேசம் மறந்த ஆளுமைகள்' என்ற நூல் அவரது திருமணத்தில் 5-11-2017 அன்று கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

'தேசம் மறந்த ஆளுமைகள்' நூல்  தூண்டில் பதிப்பகத்தில் இருந்து மொத்தமாக வாங்கப்பட்டு, புத்தகத்தின் உள் அட்டையில் திருமணம் பற்றிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு மக்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. புத்தகங்களையும், வாசிப்பையும் மக்களிடத்தில் பரவலாக்கும் இப்பணியில் அன்னை ராபியா அறக்கட்டளை தன்னை இணைத்துக் கொண்டு பங்களிப்புச் செய்தது.

முகம்மது சபியுல்லா அன்னை ராபியா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் அ. முஹமது ரஃபிக் அவர்களின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசம் மறந்த ஆளுமைகள் நூலின் உள் அட்டையில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்


Share:

0 comments:

Post a Comment

Annai Rabiya Trust

Hikmath Academy

Discovery Training Institute

Annai Rabiya Publication

பார்வையாளர்கள்